அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

Wednesday 2 August 2017

இஹ்ராம் கட்ட வேண்டிய மாதம்

         இஹ்ராம் கட்ட வேண்டிய மாதம் ..                            இஹ்ராம் கட்டுதல் என்றால் என்ன?
இஹ்ராம் அல்லது இஹ்ராம் கட்டுதல் என்பது ஹஜ்/உம்ராவுக்கு உரிய நிய்யத்தை கூறி, தல்பியா கூற வேண்டும். அப்போது ஆண்கள் குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். மேலும் சில கட்டுப்பாடுகளையும் பேண வேண்டும். இதற்குத் தான் இஹ்ராம் கட்டுதல் என்று பெயர். ஆடை அணிவதற்கு "இஹ்ராம் கட்டுதல்" என்று பெயர் கிடையாது. இனிவரும் செய்திகளில் இஹ்ராம் அல்லது இஹ்ராம் கட்டுதல் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். அப்போதல்லாம் இதை நினைவு படுத்திக் கொள்ளவும். (இது பற்றி பின்னரும் விளக்கப்பட்டுள்ளது)

இஹ்ராம் கட்ட வேண்டிய மாதம்
  1. (ரமளானுக்கு அடுத்து வரும்) ஷவ்வால் மாதம்
  2. (அதற்கு அடுத்த) துல்கஃதா மாதம்
  3. (அதற்கு அடுத்த) துல் ஹஜ் 8 க்கு முன்னதாக
ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் துவங்குகின்றன என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அதாவது ஷவ்வால் மாதம் முதலே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, கஅபாவிற்கு சென்று விடலாம். ஹஜ் செய்யும் வரை அங்கு தங்கியிருக்கலாம்.
”ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்”
(அல்குர்ஆன் 2:197)
ஹஜ் ஒரு மாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான்.
ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர். (புகாரி)
எனவே, ஹஜ்ஜுக்கு ஒரு மாதம் முன்னதாக துல்கஃதா மாதத்திலேயே இஹ்ராம் கட்டலாம்.
ஹஜ்ஜுக்கு இரண்டு மாதம் முன்னதாக ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும் ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்து தான் துவங்குவதால், அது வரை தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிட வேண்டும்.

No comments:

Post a Comment

popular posts......

Auto Scroll Stop Scroll