அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

Thursday 3 August 2017

துல்ஹஜ் நாள் -10 தவாஃப் அல் இஃபாளா

துல்ஹஜ் நாள் -10  தவாஃப் அல்  இஃபாளா

  பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் ”தவாஃப் அல் இஃபாளா” எனும் தவாஃப் செய்ய வேண்டும். இது ”தவாஃப் ஸியாரா” என்றும் ”தவாஃப்புஸ் ஸத்ர்” என்றும் கூறப்படுகிறது.
உம்ராவிற்குரிய தவாஃபை முன்னரே, மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தவுடனேயே செய்திருப்பீர்கள். இப்போது நீங்கள் செய்யப் போகும் தவாஃப், ஹஜ்ஜுக்குறிய தவாஃப் ஆகும்.


தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் குதூம்செய்யும் போது மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் ஆரம்ப தவாஃபின் போது என்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051

ஆடை எப்படி?
ஆரம்ப தவாஃபான, தவாஃபுல் குதூம் செய்யும் போது, வலது தோள்புஜம் திறந்த நிலையில், இடது தோள்புஜம் மூடிய நிலையில் (இல்திபா) இஹ்ராம் ஆடை அணிந்து தவாஃப் செய்திருப்பீர்கள்.
ஆனால், இந்த தாவாஃபுல் இஃபாளாவுக்கு இந்த வகையில் (அதாவது வலது தோள்புஜம் திறந்த நிலையில்) ஆடையணிவது கிடையாது.
மற்ற நேரங்களில் எப்படி இரண்டு தோள் புஜங்களையும் மறைத்து, ஆடை அணிந்திருப்போமோ, அப்படி இந்த தவாஃபின் போது, ஆடை அணிந்து கொள்ள வேண்டும்.

தைக்கப்பட்ட ஆடை
துல்ஹஜ் 10 ஆம் நாள் அஸர் முடிந்து, 11 ஆம் நாளின் ஆரம்பமாகிய மஃரிபிற்கு முன்னதாக தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டால் தைக்கப்பட்ட ஆடையை (சட்டையை) கூட அணிந்து கொள்ளலாம். நறுமணம் பூசலாம். என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். இதற்குரிய ஆதாரம்..
“இது உங்களுக்கு சலுயையளிக்கப்பட்ட நாள். நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும். இந்த கஅபாவை தவாஃப் செய்வதற்கு முன்னால் மாலை நேரத்தை அடைந்துவிட்டால், இஹ்ராமிலேயே தொடர்ந்து இருந்துவிடுங்கள்” என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத்: 1708)

No comments:

Post a Comment

popular posts......

Auto Scroll Stop Scroll